சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவ-மாணவியர் யோகா பயிற்சி

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் மாணவ-மாணவியர் யோகா பயிற்சி செய்தனர்.

Update: 2022-06-21 15:56 GMT

ஆறுமுகநேரி:

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் எஸ்.அனுராதா ராஜா தலைமை தாங்கினார். மாணவ மாணவியரின் மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், பள்ளி நிர்வாகி வி. மதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சுப்புரத்தினா வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவியர் 500 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து யோகாசனம் செய்தனர். இதில் பாதகஸ்தாசனம். உஷ்ட்டாசனம், பத்மாசனம் பஜங்காசனம், உட்பட பல்வேறு ஆசனங்கள் செய்து காட்டினர். இதனை யோகா ஆசிரியர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான பயிற்சியாளர்கள் சிவராம், ஸ்ரீதேவி, ஆகியோர் நெரிமுறைபடுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் நன்றி கூறினார். உடற்கல்வி ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியை மகேஸ்வரி, ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோன்று கடம்பூரில் தேசிய யோகா தினத்தை முன்னிட்டு கடம்பூர் ஜார்ஜ் நடுநிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மூலிகை கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கயத்தாறு வட்டார மருத்துவர் ராஜ்குமார், சித்த மருத்துவர்கள் டாக்டர்கள் விமலா, மணிமங்கலம் மற்றும் மருந்தாளுநர்கள் சுப்பிரமணியன், ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்