திறனாய்வு தேர்வில் மாணவி வெற்றி
சங்கரன்கோவிலில் திறனாய்வு தேர்வில் மாணவி வெற்றி பெற்றார்.
சங்கரன்கோவில்:
8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நடந்தது. இதில் சங்கரன்கோவில் அம்பேத்கர்நகர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் மாணவி அனுசுயா வெற்றி பெற்று உள்ளார்.
மாணவியை பள்ளி தாளாளர் சாக்கோ வர்கிஸ், வட்டாரகல்வி அலுவலர்கள் செல்வபாக்கிய சாந்தினி, அந்தோணிராஜ், பள்ளி தலைமை ஆசிரியை மரிய அந்தோணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கணேசன் உள்பட பலர் பாராட்டினார்கள்.