மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ஓசூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில்கல்லூரி மாணவர் பலியானார். உறவுக்கார வாலிபர் படுகாயம் அடைந்தார்.
ஓசூர்:
கல்லூரி மாணவர்
பெங்களுரூ அருகே ஹெப்பகோடி பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ் (வயது 19). இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவினர் மகாதேவபுராவை சேர்ந்தவர் சிவரஞ்சன் (19).இவர்கள் இருவரும், பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வண்டியை, ஆகாஷ் ஓட்டினார். ஓசூர், மூக்கண்டப்பள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்துக்குள்ளானது.
பரிதாப சாவு
இதில் ஆகாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவரஞ்சன் படுகாயம் அடைந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.