நீட் தேர்வுக்காக பெற்றோர் கொடுத்த தொடர் அழுத்தத்தால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடியில் நீட் தேர்வுக்காக பெற்றோர் கொடுத்த தொடர் அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
ஆவடியில் நீட் தேர்வுக்காக பெற்றோர் கொடுத்த தொடர் அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவர்த்தனகிரி செல்வா நகரை சேர்ந்த பாலாஜி என்ற 17 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் பாலாஜியை நீட் தேர்வுக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கடிதம் எழுதி வைத்துவிட்டு படுக்கை அறையில் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.