திருமயம் அருகே மெய்யபுரம் பகுதியை சேர்ந்தவர் திரவியம் மகன் செபஸ்டியன் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். நேற்று மாலை தனது நண்பருடன் அருகிலுள்ள மலையடி குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கரையிலிருந்த செபஸ்டியன் நிலைதடுமாறி குளத்தில் விழுந்ததில் நீரில் மூழ்கினார். இதையறிந்த திருமயம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி செபஸ்டியன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் செபஸ்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.