செங்கல்பட்டு மகளிர் கல்லூரியில் மாணவிகள் பேரவை நியமன விழா
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் பேரவை நியமன விழா மற்றும் ராஜஸ்தான் புத்தக வங்கியில் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்கு வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ்சுரானா தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ் கன்காரியா, கல்லூரியின் முதல்வர் அருணாதேவி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ரஞ்சித் காந்திலால் ஜி ஜெயின், ஷ்ரேயன்ஸ்சேத்தியா, ராஜேஷ் குமார் ஆர்.ஜெயின், மகாவீர் சி ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகங்களை வழங்கினார்கள்.
தொடர்ந்து முன்னாள் மாணவிகள் பேரவை உறுப்பினர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேரவையின் துணை பொறுப்பாளர் சாந்தலட்சுமி புதிய மாணவர் பேரவைக்காக தேர்வான மாணவிகளை அறிமுகபடுத்தினார். பின்னர் மாணவிகள் பேரவை தலைவியாக அனிஷ்பாத்திமா, துணை பேரவை தலைவியாக அபிநயா, பொருளாளராக ரேவதி, துணை பொருளாளராக பெல்சி, செயலாளராக உஷா, துணை செயலாளராக சங்கே லாஜோ ஆகியோர் பொறுப்பேற்றதைதொடர்ந்து பேரவையின் துணைபொறுப்பாளர் உறுதிமொழி கூற பொறுப்பேற்றவர்கள் வழிமொழிந்தனர்.