பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதாததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கலசபாக்கத்தில் பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதாததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-01 16:00 GMT

கலசபாக்கம்

கலசபாக்கத்தில் பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதாததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த செல்வம் (வயது 47) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

செல்வம் தனது மனைவி காமாட்சி, மகள் பவித்ரா (17), மகன் நடராஜன் (11) ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருகிறார்.

கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பவித்ரா 12-ம் வகுப்பும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடராஜன் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

தற்போது நடந்த பொதுத்தேர்வை சரியாக எழுதாததால் பவித்ரா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தேர்வு சரியாக எழுதாததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்