எரியோடு அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

எரியோடு அருகே செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-08 19:51 GMT

எரியோடு அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் நீதிராஜன். தச்சு தொழிலாளி. இவரது மகன் ரூபன் (வயது 17). நீதிராஜனின் மனைவி அபிராமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நீதிராஜனும், ரூபனும் ஆர்.புதுக்கோட்டையில் ஒன்றாக வசித்து வந்தனர். ரூபன், கே.ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளயில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் ரூபன் பாடம் படிக்காமல் அடிக்கடி செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நீதிராஜன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரூபன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்