உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட சுதந்திர நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. பேரணியில் ஊர் பெரியவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து துணை தலைவர் கணபதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.