கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை முறிந்தது

கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை முறிந்தது.

Update: 2023-06-24 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனத்தில் உள்ள மருதமரம் அருகே புதிய கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு சென்ட்ரிங் காண்டிராக்டராக கார்த்திக் (வயது 38) என்பவரும், கட்டிட என்ஜினீயராக கணேசன் (62) என்பவரும் வேலை செய்தனர். சம்பவத்தன்று கான்கிரீட் கலவை எந்திரத்தில் கலவை போட்டுள்ளனர். கலவை போடும் பணியில் மேலூரை சேர்ந்த தொழிலாளியான பிரதீப்(20) ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து எந்திரம் ஓடி கொண்டிருந்தபோது பிரதீப் எந்திரத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி அவருடைய கை முறிந்தது. பின்னர் அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்ட்ரிங் காண்டிராக்டர் கார்த்திக், கட்டிட என்ஜினீயர் கணேசன் ஆகியோர் மீது திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்