முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம்

முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம் நடந்தது.

Update: 2023-05-19 18:45 GMT

மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று காலை மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது. இதற்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட தலைவர் பார்வதி வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டையை தபால்பெட்டியில் போட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்