ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, ஆதித்தமிழர்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விஸ்வைகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கிருஷ்ணாபாளையம் கீழத்தெரு காமநாயக்கன்பேட்டை அருந்ததியர் சமூகத்திற்கு சொந்தமான இடத்தில் பல தலைமுறையாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிற இடத்தை நில அளவை செய்து, உரிய ஆவணத்துடன் வழங்க வேண்டும். இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதற்கு நிரந்தரமான மயான பாதை அமைத்து தர வேண்டும். எஸ்.சி. ஆணையம் அறிவித்ததை நடைமுறைபடுத்தாமல், அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.