சிவகிரியில் பஞ்சாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிவகிரியில் பஞ்சாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2022-08-19 20:29 GMT

சிவகிரி

சிவகிரி பாலமேட்டு புதூரில் தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணி நூல்துறையின் கீழ் பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான விசைத்தறி கூடம் உள்ளது. இங்கு 25 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை, பள்ளிக்கூட சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென தறிகள் செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தொழிலாளர்கள் பஞ்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தறிகளை வழக்கம்போல் உடனடியாக இயக்க வேண்டும். தறிகளை நவீனப்படுத்த வேண்டும். புதிய ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்த வேண்டும். மருத்துவ வசதி போன்ற சலுகைகள் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்