வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தில்பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.;

Update:2023-10-13 01:57 IST

தலைவாசல்

தலைவாசல் அருகே வீரகனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 10-வது வார்டில் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்