கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மறியல் போராட்டம்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-27 18:45 GMT

ஓசூர்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதை கண்டித்தும் தண்ணீர் இல்லாத நிலையிலும் தொடர்ந்து தண்ணீர் கேட்பதாக தமிழக அரசை கண்டித்தும் கன்னட ஜாக்ருதி வேதிகே என்ற கன்னட அமைப்பினர் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அத்திப்பள்ளி டோல்கேட் பகுதியில் இருந்து அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் ஊர்வலமாக வந்த அமைப்பினரை கர்நாடக போலீசார் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அத்திப்பள்ளி வளைவு அருகே அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 75 பேரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக தமிழக பஸ்கள் சிறிது நேரம் மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இயல்புநிலை திரும்பியதும் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்