சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ளவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தக்கோரி கடை அடைப்பு போராட்டம்

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடத்தக்கோரி கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-20 19:45 GMT

சூளகிரி

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடத்தக்கோரி கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

விநாயகர் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், விநாயகர் கோவில் இருந்தது. இந்த கோவில் பழுதடைந்தது. இதையடுத்து அந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சாமி சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே விநாயகர் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சூளகிரியில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தன. இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கடை அடைப்பு போராட்டம்

இந்த நிலையில், நேற்று சூளகிரியில் அனைத்து பகுதிகளிலும் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் சூளகிரி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் வரை, போராட்டங்களை தொடர, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்