சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் - மேயர் பிரியா தகவல்

சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

Update: 2024-11-09 11:51 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னையில் 13-ம் தேதிக்குப் பிறகு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் கடந்த மாதம் பெய்த மழையின்போது, சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இனிவரும் நாட்களில் மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு மோட்டார்கள் அமைத்து மழைநீர் உடனடியாக வெளியேற்றப்படும். இதற்காக மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்