ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ் பதிவு
ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039-வது சதய விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி ராஜராஜ சோழனின் 1039-ம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம்... நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.