மருத்துவர்கள், மருத்துவமனைகள் விளம்பரம் செய்ய தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2024-11-09 13:58 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை முறைப்படுத்தக்கோரி மங்கையர்க்கரசி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, மருத்துவர்கள், மருத்துவமனைகள் சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தனர்.

விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். மனுதாரர் இதுசம்பந்தமாக மருத்துவ ஆணையத்திடம் புகார் அளிக்கலாம். போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இருப்பதால், விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்