தேன்கனிக்கோட்டை அருகேதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூர் காய்கறி மார்க்கெட்டில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. 12-வது நாளான நேற்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கெலவரப்பள்ளி அணை நீர் ரசாயனம் கலந்து இருப்பதாக கூறி அவற்றை பாட்டிலில் அடைத்து வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், கவுரவ தலைவர் வெங்கட்ராஜ், அவைத்தலைவர் கிருஷ்ணன், காமன்தொட்டி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதிலட்சுமி திம்மராஜ், கோபம்மா சக்கார்லப்பா, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமம்மா தியாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.