விவசாயிகளிடம் தரமற்ற பருத்தி விதை விற்றால் கடும் நடவடிக்கை:வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை

விவசாயிகளிடம் தரமற்ற பருத்தி விதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-02-14 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ஆ.வனஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பயிர்களின் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடைக்கு பின் நிலத்தில் தை, மாசி பட்டத்தில் கோடை இறவை பயிராக பருத்தி பயிரிடுவா். அவற்றிற்கான விதைகளை வாங்கும்போது, விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். சான்று அட்டை அல்லது உண்மை நிலை அட்டை பொருத்திய விதைகளையே வாங்க வேண்டும். தங்கள் பகுதிக்கு மற்றும் பருவத்திற்கு ஏற்ற விதைகளையே வாங்க வேண்டும். குவியல் எண் மற்றும் காலாவதி நாள் இட்ட பட்டியலை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் விதை விற்பனை நிலையங்களில் மூட்டைகளில் வைத்து அட்டைகள் பொருத்தாத விதைகளை விற்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்பவர்களின் விதைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்