மரபணு மாற்றம் செய்த பருத்தி ரக விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

மரபணு மாற்றம் செய்த பருத்தி ரக விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-20 10:50 GMT

மரபணு மாற்றம் செய்த பருத்தி ரக விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் எஸ்.ஆர்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை

திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மத்திய அரசின் அனுமதி பெறாத களைக் கொல்லி தாங்கி வளரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் மத்திய அரசால் அங்கீகாரம் பெறாமல் சில நிறுவனங்கள் விற்பனை செய்வதாக தெரிய வருகிறது.

எனவே மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத களைக் கொல்லி தாங்கி வளரக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகள் விற்பனை செய்வது மற்றும் அதை வாங்கி சாகுபடி செய்வது விதைச் சட்டம் 1966-ன் படி விதி மீறல் செயலாகும்.

கடும் நடவடிக்கை

மேலும் இச்செயலில் ஈடுபடும் விதை உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விதை விற்பனை நிலையங்கள் மீது விதைச்சட்டம் 1966, விதைகள் விதி 1968 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு சட்டம் 1963-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே மரபணு மாற்றம் செய்த பருத்தி ரக விற்பனை செய்வது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்