மதுபான பார்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-14 17:46 GMT

சென்னை.

தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் மதுபான பார்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதாக 4 மதுபான பார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கை எடுக்க கலால் துறை, போலீஸ் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது'' எனறு கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்