தெருவிளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி
மன்னார்புரத்துக்கு தெருவிளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
இட்டமொழி:
நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் சங்கனாங்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட மன்னார்புரம், சவேரியார்புரம் ஆகிய ஊர்களுக்கு நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் சார்பில் அவரது சொந்த செலவில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தெருவிளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மன்னார்புரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் மன்னார்புரம் அகஸ்டின் கீதராஜிடம் தெருவிளக்குகளை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகி இட்டமொழி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.