எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-12 17:59 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் முகமது நபி பற்றி அவதூறாக கருத்துகளை கூறிய நுபுல் சர்மா மற்றும் நவின் ஜிண்டால் ஆகியோரை கைது வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொகுதி தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ்தீன், தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சையத் தாஹிர் அலி வரவேற்றார். மாவட்ட தலைவர் முகமத் ரபி, மாவட்ட செயலாளர் தர்பார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் நகர தலைவர் ஆசாத் அலி, கள்ளகுறிச்சி நகர செயலாளர் அத்னான், நிர்வாகிகள் அப்துல்லா, இஸ்மாயில் மற்றும் தேவபாண்டலம், மூங்கில்துறைப்பட்டு, வடசேமபாளையம் மற்றும் மூரார்பாளையத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்