எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-10 21:10 GMT

களக்காடு:

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். துணை பொருளாளர் இளையராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஜலில், துணை தலைவர் உசேன், தொகுதி தலைவர்கள் செய்யது, தெளபிக், செயலாளர் உசேன், ரிஸ்வான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிராஜ் வரவேற்றார். இதில் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சித்திக், புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர தலைவர் கமாலுதீன், செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது ரபிக், ஆரிப் பைஜீ, கபீர், பீர்முகம்மது, பத்தமடை நகர தலைவர் ஷெரிப், சேரன்மாதேவி நகர தலைவர் அஹமது, கவுன்சிலர்கள் அப்துல் கபூர், ரஹ்மத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்