எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கைசர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஆசிக் முகமது முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாருக் ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.