வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ குட்கா பறிமுதல்

ஆண்டிப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-07-07 17:49 GMT

ஆண்டிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் (வயது 30). இவரை வீட்டில் குட்கா பதுக்கி வைத்ததாக போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அவரது வீட்டில் சோதனை செய்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த காளிராஜ் (30), வேல்முருகன் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்