வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-11 20:15 GMT


தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை தீவிரமாக கண்காணிக்குமாறு சென்னை உணவு கடத்தல் பிரிவு போலீஸ் டி.ஜி.பி.வன்னிய பெருமாள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை மண்டல உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜ், மதுரை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு. ஜெகதீசன் உத்தரவுப்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருவாய்த்துறை பறக்கும் படை தாசில்தார் ராமச்சந்திரன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசாருடன் இணைந்து அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுப்பானடி ராஜமான் நகரில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அங்குவிரைந்து சென்று அங்கிருந்த 2½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பதுக்கி வைத்திருந்த கதிர்வேல் என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்