சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

மயிலத்தில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Update: 2022-11-26 18:45 GMT

மயிலம்

செஞ்சி தாலுகா, தளவாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் கோவிந்தன்(வயது 32). இவருக்கும் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நேற்று மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர். இதை அறிந்து திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி விழுப்புரம் சமூக நல துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சமூக நல ஆலோசகர் காயத்ரி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, டான் போஸ்கோ ஆகியோர் சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 17 வயது என்பது உறுதியானதை அடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு, விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்