கல்லால் அடித்து ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
திண்டிவனம் அருகே கல்லால் அடித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே பிரம்மதேசத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக ஒருவர் சென்றார். அப்போது அவர் தனது ஏ.டி.எம்.கார்டு மூலம் எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் எந்திரத்தில் பணம் இல்லை. பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அடித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.