திருமங்கலம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு; 2 பெண்கள் படுகாயம்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருமங்கலம் அருகே பொதிகை ரெயில் மீது கல்வீச்சு நடந்ததில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-04-17 20:29 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே பொதிகை ரெயில் மீது கல்வீச்சு நடந்ததில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொதிகை எக்ஸ்பிரஸ்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ெரயில் திருமங்கலம்-மதுரை இடையே திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தை கடந்து செல்லும் போது இரவு 9.20 மணி அளவில் முன்பதிவு இல்லாத பெட்டி மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த ெரயிலில் பயணித்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலா(வயது 28) படுகாயம் அடைந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் அருகே தென்காசி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி என்ற பெண் அமர்ந்து பயணித்துள்ளார். இவரும் மர்ம நபர்கள் வீசிய கல் வீச்சில் காயம் அடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிைல நிறுத்தினர்.

இதையடுத்து ெரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆறுமுக பாண்டியன் மற்றும் தீபா ஆகியோர் விரைந்து சென்று அந்த ரெயில் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் படுகாயம் அடைந்த பெண்களுக்கு ெரயிலில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த ெரயில் மதுரை ெரயில் நிலையத்திற்கு வந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 2 பெண்களும் உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ெரயில்வே பாதுகாப்பு படையினர் கப்பலூர் டோல்கேட், மறவன்குளம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அந்த பகுதியில் யாரும் சிக்கவில்லை.

கலாவின் சகோதரி முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் ெரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம், செல்லப்பாண்டி மற்றும் போலீசார், கல்வீசி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பயணிகள் அதிர்ச்சி

பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் அதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்