அரசு பஸ் மீது கல்வீச்சு

காரைக்குடி அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது.

Update: 2022-12-25 18:57 GMT

காரைக்குடி,

காரைக்குடியில் இருந்து கடியாபட்டி செல்லும் நகர பஸ் பழையூர் - கொத்தமங்கலம் வளைவு இடையே நேற்று காலை சென்றது. அப்போது அந்த வழியாக பஸ்சுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் அரசு பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்