பாலக்கோடு அரசு பள்ளியில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்பு

Update: 2023-01-06 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு பேரூராட்சி அக்ரஹாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மேலும் பெரியகும்மனூர் அருந்ததியர் காலனியில் 12 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை கே.பி.அன்பழகன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், நகர செயலாளர் ராஜா, கவுன்சிலர் விமலன் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்