திருட்டு போன செல்போன்கள் மீட்பு

திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2023-05-09 19:34 GMT


விருதுநகர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசிடம் புகார் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று ஆன்லைன் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி செய்யப்பட்டது தொடர்பாகவும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த போலீசார் திருட்டு போன செல்போன்களையும் மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தையும் மீட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட 150 செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 190-யை இழந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செல்போன்களையும், பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்