தார்சாலை அமைக்கக்கோரி மறியல்
தார்சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.;
குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் தார்சாலை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் குன்றாண்டார்கோவில் நால்ரோடு பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி, கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.