ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒட்டி உள்ள சுவரொட்டியால் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒட்டி உள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-15 16:51 GMT


அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை ஏற்க வரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒட்டி உள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒற்றை தலைமை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை உருவாக வேண்டும் என்பது குறித்து சென்னையில் நடந்த அந்த கட்சியின் கூட்டத்தில் விவாதம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அ.தி.மு.க.வினர் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும். அது ஓ.பன்னீர் ெசல்வம் தலைமையில் அமைய வேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் அது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

இந்த சுவரொட்டிகள் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதவிர ஓ.பி.எஸ். அணியினர் ஒற்றை தலைமை ஏற்க வருமாறும், இ.பி.எஸ். அணியினர் தலைமை ஏற்கும் இ.பி.எஸ்.-க்கு வாழ்த்துக்கள் என்றும் ஒட்டப்பட்டுள்ளது.

பரபரப்பு

அதே போல கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை ஏற்க வா என பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

பரமக்குடி, பார்த்திபனூர், சத்திரக்குடி, நயினார்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க வேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு தரப்பினரும் போட்டி போட்டு சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்