"ஸ்டெர்லைட் பராமரிப்புக்கு அனுமதி" - தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம் குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-06-02 09:00 GMT

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல, ஆலை பாதுகாப்பை ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களின் கருத்தை ஆட்சியர் செந்தில் ராஜ் கேட்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆலை பராமரிப்பின்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள், மற்றும் இது தொடர்பான பல்வேறு விவாதங்கள் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு ஆட்சியர் அளித்த பேட்டியில் கூறும்போது; ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படு உள்ளது. ஆலை பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் இருப்பார்கள்.

இந்த குழுவில் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 பேர் இருப்பார்கள். ஆலை பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும்.

கழிவுகளை அகற்றும் பணியின்போது 24 மணிநேரமும் பாதுகாப்புப்பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் அகற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்