எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சமீமா தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் ஆத்தூர் பைசல் ரகுமான் கலந்து கொண்டு பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மயிலாடுதுறையில் ஜூலை 3-ந் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.