ராமேசுவரத்தில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை

ராமேசுவரத்தில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-10-26 18:51 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமகிருஷ்ண மடம் அருகே மருது பாண்டியர்கள் சிலை அமைந்துள்ளது. மருதுபாண்டியர் சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவையொட்டி ராமேசுவரம் ராமதீர்த்தம் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து திட்டக்குடி சாலை நடுத்தெரு மேல ரதவீதி சாலை வழியாக மருது பாண்டியர்கள் சிலை பகுதிக்கு வருகின்றனர். தொடர்ந்து மருது பாண்டியர்கள் சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. மருதுபாண்டியர் சிலைக்கு காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்துகின்றனர். அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்துகின்றனர். ஏற்பாடுகளை ராமேசுவரம் அகமுடையார் சங்க நகர்தலைவர் என்.ஜே.போஸ் தலைமையில் கவுன்சிலர்கள், முகேஷ்குமார், சத்யமூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். குருபூஜையையொட்டி மருது பாண்டியர்கள் சிலை மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்