மாநில அளவிலான கைப்பந்து போட்டி
வடுவூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
வடுவூர்;
வடுவூரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு முன்னிலை வகித்தார். போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணி, கஸ்டம்ஸ் அணி, ஜி.எஸ்.டி. அணி, வருமானவரித்துறை அணி ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடியது.பெண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி, எஸ்.ஆர்.எம். அணி, தமிழ்நாடு காவல்துறை அணி, பி.கே.ஆர். ஈரோடு அணி ஆகியவை பங்கேற்றது.இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாநில அளவிலான பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சீலன், அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வடுவூர் கைப்பந்து கழக தலைவர் நாச்சியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.