திருச்சியில் மாநில அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. 250, 350, 450, 550, 750, 1,000, 1650 ஆகிய கி.மீ. தொலைவு வரை புறாக்கள் பறந்து செல்லக்கூடிய வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த புறாவின் உரிமையாளருக்கு விலையுயர்ந்த புறா மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 1650 கி.மீ. தொலைவுக்கான போட்டியில் சேதுராமனின் புறா வெற்றி பெற்றது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை குருநாதன் தட்டி சென்றார். முன்னதாக பரிசளிப்பு விழாவில் சங்க தலைவர் தனசிங், கவுரவ தலைவர் பிரசாத், பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.