வீரபாண்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

வீரபாண்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

Update: 2023-05-28 21:00 GMT

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா தேனி கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த 20-ந்தேதி தொடங்கிய போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 32 அணிகள் கலந்துகொண்டன.

போட்டியில் கோட்டூர் மில்லேனியம் அணி முதலிடம் பிடித்து ரூ.25 ஆயிரம் பரிசை தட்டிச்சென்றது. வடுகபட்டி ஸ்கார்பியன் அணி 2-ம் இடத்தை பிடித்து ரூ.15 ஆயிரத்தையும், கோட்டூர் கிரிக்கெட் கிளப் அணி 3-ம் இடத்ைத பிடித்து ரூ.10 ஆயிரத்தையும், தேனி என்.சி.சி. அணி 4-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும் பரிசாக வென்றன.

இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சவுராஷ்டிரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முன்னா சுருதி பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ராஜதுரை செய்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்