மாநில அளவிலான செஸ் போட்டி நிறைவு

மாநில அளவிலான செஸ் போட்டி நிறைவடைந்தது. இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-09-18 18:32 GMT

புதுக்கோட்டையில் மாநில அளவிலான செஸ் போட்டி கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். 9 சுற்றுகளின் இறுதியில் திருவள்ளூரை சேர்ந்த சுரேந்திரன் முதலிடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த மிதுன் ஆனந்த் 2-ம் இடத்தையும், செங்கல்பட்டை சேர்ந்த ராமநாதன் பாலசுப்பிரமணியன் 3-ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 25 வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டன. இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்குபெற்ற மூத்தோர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக தலைவர் ராமச்சந்திரன் பங்கு பெற்று பரிசுகளை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், செஸ் கழக செயலாளர் கணேசன், துணைத்தலைவர் அடைக்கலவன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்