மாநில அளவிலான செஸ் போட்டி

மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.;

Update:2023-06-07 23:41 IST

புதுக்கோட்டையில் 26-வது மாநில ரேபிட் விரைவு சதுரங்கப் போட்டி மற்றும் 25-வது பிளிட்ஸ் செஸ் போட்டிகள் செந்தூரான் கல்லூரியில் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகள் சர்வதேச செஸ் நடுவர் ஆனந்த பாபு தலைமையில் நடைபெற்றது. ரேபிட் விரைவு செஸ் போட்டியில் முதல் பரிசை சிவகங்கையை சேர்ந்த தினேஷ் ராஜனும், 2-ம் பரிசை கோவையை சேர்ந்த ஆகாஷும், 3-ம் பரிசை சிவகங்கையை சேர்ந்த ரோஹித்தும் பெற்றனர். பிளிட்ஸ் போட்டியில் முதல் பரிசை சிவகங்கையை சேர்ந்த தினேஷ் ராஜனும், 2-ம் பரிசை கோவையை சேர்ந்த ஆகாஷும், 3-ம் பரிசை சென்னையை சேர்ந்த கே.பி.ஆகாஷும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், கோப்பைகளும், சான்றிதழ்களையும் புதுக்கோட்டை மாவட்ட செஸ் சங்க தலைவர் எஸ்.ராமசந்திரன் வழங்கினார். இதில் மாவட்ட சதுரங்க கழக செயலர் பேராசிரியர் கணேசன், பொறுப்பாளர்கள் அடைக்கலவன் மற்றும் அங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்