மாநில அளவிலான சதுரங்க போட்டி
திருப்பத்தூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி திருப்பத்தூர் அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 27 மாவட்டங்களில் இருந்து 650 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 15 பரிசுகள் வீதம் அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் 200 கோப்பைகளும், 600 பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் பொது பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் துணைத் தலைவர் மணிகண்ட சாமி, வேலூர் மாவட்ட பொருளாளர் மனோகரன், ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் சோழவந்தான், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஆனந்த், திருப்பத்தூர் வட்டார செயலாளர் வில்லியம்ஸ் ரெனால்ட், தேசிய மற்றும் மாநில சதுரங்க நடுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.