கண்காணிப்பு கேமரா சேவை தொடக்கம்
பனப்பாக்கம் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா சேவை தொடங்கப்பட்டது.
பனப்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எனவே பஸ் நிலையத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 6 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் குமார், நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, லோகேஷ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் குலோத்துங்கன், இளைஞரணி சரவணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.