மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
கோத்தகிரியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க நிகழ்ச்சி சக்திமலை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழல் சேவை விருது பெற்ற அரசு பஸ் கண்டக்டர் யோகநாதன் மரக்கன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். நேற்று 50 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என்று தெரிவித்தனர்.