குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது.

Update: 2022-06-26 19:20 GMT

சிவகாசி, 

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் போதிய துப்புரவு பணியாளர்கள் பணியில் இல்லாததால் மருத்துவமனை பகுதியில் உள்ள மரங்களில் இருந்து விழும் இலைகள் மற்றும் கிளைகள் அதிகளவில் அகற்றப்படாமல் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து தன்னார்வலர்கள் உதவியுடன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குப்பைகளயை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். இதற்கான பணி நேற்று காலை தொடங்கியது. சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சியின் 28-வது வார்டு கவுன்சிலர் வெயில்ராஜ், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்