கோபி அருகே, தனியாக நின்ற 2½ வயது பெண் குழந்தை மீட்பு

கோபி அருகே, தனியாக நின்ற 2½ வயது பெண் குழந்தை மீட்கப்பட்டது

Update: 2023-10-20 22:53 GMT

கோபி அருகே உள்ள வண்டிபாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதியில் 2½ வயது பெண் குழந்தை கையில் பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது. உடனே வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று அந்த குழந்தையை பார்த்தனர். அப்போது அந்த குழந்தையின் அருகில் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகனன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தை மீட்டார்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தை இங்கு எப்படி வந்தது? அல்லது யாராவது குழந்தை கடத்தி வந்து கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் விட்டுவிட்டு தப்பினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்